தேர்தலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சு

அதேவேளை, 19 பாடசாலைகளும், இரண்டு கல்வியியல் கல்லூரிகளும் இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படும் என்றும் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான மத்திய நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளில் முன்னாயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், 19 பாடசாலைகளும், 2 கல்வியியல் கல்லூரிகளும் இன்று தொடக்கம் மூடப்படுமெனத் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
இன்று மூடப்படும் பாடசாலைகளில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மட்ட க்களப்பு இந்துக் கல்லூரி, திருகோணமலை விபுலானந்த வித்தியாலயம் ஆகி யனவும் உள்ளடக்கியுள்ளன.