Breaking News

லசந்த படுகொலை ; முன்னாள் பொலிஸ்மா அதிபர் கைது.!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமது ங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கல்கிஸை பிரதேசத்திற்கு பொறு ப்பான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி கல்கிஸை பிர தேசத்தில் வைத்து இனந்தெரியாத ஆயுத தாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் இன்று கல்கிஸை நீதி வான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.