Breaking News

அமெரிக்க இந்திய தூதுவர்கள் ஜனாதிபதி பிரதமருடன் அவசர சந்திப்பு!!!

இலங்கைக்கான இந்தியத் தூதுவரும், அமெரிக்கத் தூதுவரும், நேற்று அவசர மாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அர சின் பங்காளிக் கட்சிகள் பின்னடை வை சந்தித்துள்ளதையடுத்து, கொழு ம்பு அரசியலில் குழப்பங்கள் தோன்றி யுள்ளன. கூட்டு அரசாங்கம் ஆட்டம் காணும் நிலையை அடைந்துள்ள சூழ லில், நேற்று, இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, அலரி மாளிகை யில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதி பதியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள, விஜய் கோகலேயை சந்திப்பதற்காக, புதுடெல்லிக்குப் புறப்படுவதற்கு முன்னர், இச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் நேற்று ஜனாதிபதியையும், பிரதமரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி யுள்ளார். 

இந் நிலையில், கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதில், இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அமெரி க்க, இந்திய தூதுவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்தமை, வழக்க மான சந்திப்பென தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.