Breaking News

பொருளாதார முகாமைத்துவ குழுவை கலைக்குமாறு ஜனாதிபதி எச்சரிக்கை.!

அமைச்சரவையின் கீழ் வரும் பொரு ளாதார முகாமைத்துவ குழுவினை கலைக்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி யுள்ளார். ஜனாதிபதியின் இந்த நிலை ப்பாடு குறித்து பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க உட்பட அமைச்சர்கள் விள க்கமளித்ததையடுத்து அமைச்சரவை யில் பெரும் இழுபறி நிலை ஏற்பட்ட போதிலும் இவ் விடயம் தொடர்பில் இறுதி முடிவு தீா்வாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது. அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றதன் பின்னர் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பெருமளவான அமை ச்சர்கள் கலந்துள்ளனா். 

அமைச்சரவையின் கீழ்வரும் பொருளாதார முகாமைத்துவ குழுவினை கலை க்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலி யுறுத்தியுள்ளார். பொருளாதார விடயங்கள் எதுவாயினும் அது குறித்து அமை ச்சரவையில் ஆராய்ந்து அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும். இதனை விடுத்து இவ்விடயங்களை பொருளாதார முகாமைத்துவ குழுவிற்கு சமர்ப்பி த்து ஆராய்ந்து அதன் பின்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பது என்பது தேவை யற்ற விடயமாகும். 

அமைச்சரவைக்கு மேலும் ஒரு குட்டி அமைச்சரவை தேவையற்றது என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார முகாமைத்துவ குழு தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களே என்னிடம் பல தடவைகள் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். 

இக்குழுவானது முதலீட்டாளர்களை வரவழைப்பதாக கூறி எம்மை ஏமாற்றி வருகின்றது. குளியாப்பிட்டியில் வொக்செக்கன் கார் தயாரிக்கும் கம்பனி உரு வாக்குவதாகவும் களுத்துறையில் டயர் உற்பத்தி நிலையத்தை உருவாக்கு வதாகவும் எம்மை அழைத்துச் சென்று அவர்கள் அவமானப்படுத்தினார்கள். 

இத்தகைய செயற்பாடுகள் ஜனாதிபதியான எனக்கும் பிரதமரான உங்களு க்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. எனவே இந்த குழுவின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி அமைச்சர வைக் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விள க்கம் அளித்துள்ளார். அமைச்சரவைக்கூட்டத்தில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்களை மேற்கொள்ள முடியாது. இதனாலே பொருளாதார விடய ங்களை பொருளாதார முகாமைக்குழுவிற்கு சமர்ப்பித்து அதன்மூலம் நடவடி க்கை எடுக்கப்படுவதாக பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். 

பிரதமருக்கு ஆதரவாக அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, மங்கள சமரவீர ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் கருத்துக்கு ஆதரவாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கருத்து கூறியுள்ளார். 

சுமார் ஒருமணி நேரம் இவ் விடயம் குறித்து வாதப் பிரதி வாதங்கள் இழு பறி யாயின இவ்வாறான இழுபறி நிலையில் இவ் விவகாரம் குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமலேயே அமைச்சரவைக் கலந்துரையாடல்  நிறைவடை ந்துள்ளது. 

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவி ஏற்றதையடுத்து அமைச்சரவை யின் கீழ் பொருளாதார விடயங்களை கையாள்வதற்கு பொருளாதார முகா மைத்துவக் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவில் பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரசிங்கம் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனா்.