Breaking News

இரா.சம்பந்தரின் 85வது பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட பூஜை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இரா. சும்பந்தரின் 85வது பிறந்த நாளான நேற்று(05.02.2018) திங்கட்கிழமை மாலை, திருக்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலயத்தில் நீண்ட ஆயுள் வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

இந்தப் பூஜையானது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில், தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவர் அரசரெட்ணம் கலாநேசனின் தலைமையில் நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை வேட்பாளர்களும், தமிழரசு கட்சியின் உபசெயலாளர், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, இரா.சம்பந்தர், உடலாரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டதோடு, இரா.சம்பந்தர் தீர்க்க தர்சனமான தனித்துவம் மிக்க அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக விரைவாக தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப் பெற வேண்டும் என, சிவனை வேண்டி பிராத்தனைகளில் பங்கு பற்றினர்.