உள்ளுர் அதிகார சபைகளில் பெண் பிரதி நிதித்துவ விடயத்தில் முரண்பாடு!
உள்ளுர் அதிகார சபைகளில் 25 சதவீத பெண் பிரதி நிதித்துவம் வழங்குவ தில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரண மாக, குறித்த சட்டத்தில் திருத்த ங்களை முன்னெடுக்க வேண்டுமெ னத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணை க்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் தேர்த ல்கள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதன் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு கட்சி, தாம் பெற்றுக்கொண்ட பிரதி நிதித்துவத்தின் அடிப்படையில், பெண் பிரதி நிதித்துவத்தை நியமிக்க முடியாது போகுமிடத்து, அதன் தாக்கம் ஏனைய கட்சிகளுக்கு ஏற்படாத வகையில் சட்டத் திருத்தங்களை எதிர்கால த்தில் மேற்கொள்ள வேண்டும்.
சில உள்ளுர் அதிகார சபைகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கட்சிக்குத்தான் பெண் பிரதிநிதித்துவத்தை நியமிக்க வேண்டிய நிலை ஏற்ப ட்டுள்ளது.
எனவே, இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தேர்த ல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.







