இந்திய பிரஜைகள் மூவர் கைது - சர்வதேச விமான நிலையத்தில்.!
இந்தியாவில் வர்த்தக உதவியாளர்களாக பணியாற்றும் மூன்று இந்தியப் பிரஜைகள் 55 லட்சம் ரூபா பெறுமதியுடைய 10 தங்க பிஸ்கட்களுடன் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைதாகியுள்ளனர்.
குறித்த இந்தியப் பிரஜைகள் மூவரும் தனியார் விமான சேவைக்கு உரி த்தான விமானத்தில் இந்தியா நோக்கி பயணிக்க இருந்த நிலையில் அவ ர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 55 லட்சம் ரூபா பெறுமதியான 10 தங்க பிஸ்கட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன