இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரகாலச் சட்டத்திற்கு தீர்மானம்.!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து 10 நாட்களுக்கு அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற அவசர கலந்துரையாடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டு ள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை பேச்சாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளாா்.
இது தொடர்பான வர்த்தமானி அறி விப்பு இன்று வெளியிடப்படுமென தெரிவித்துள்ள இதேவேளை ஜனாதி பதி செயலகத்திற்கு முன்பாக ஊடக ங்களுக்கு கருத்து தெரிவித்த அமை ச்சர் எஸ்.பி திஸாநாயக்க,
“நாட்டில் தோன்றியுள்ள வன்முறைகள் குறி த்து எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர கால நிலையை பிரகடனம் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும்.” என்றார்.
இது தொடர்பிலான வர்த்தமானி அடு த்து வரும் மணித்தியாலங்களில் வௌியிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை இலங்கையின் அவசரகாலச் சட்டத்தின்படி (State of emergency in Sri Lanka), நாட்டின் பாதுகாப்புக் கடமையிலுள்ள முப்படையினராலும் எந்த நேர மும் யாரையும் விசாரணைகளின்றி கைது செய்வதற்கான நிலைமை ஏற்ப டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி – தெல்தெனிய,திகன மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெற் இனமுறுகலை அடுத்து பாரிய அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றன.
இத னையடுத்து அங்கு விசேட அதிரடிப் படை மற்றும் பொலிஸார் குவிக்கப்ப ட்டதோடு கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன மற்றும் பல்லேகலை ஆகிய பகுதிகளில் இரண்டாவது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் 1948ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் அறிமுக மான அவசரகாலச் சட்டத்தை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் 2011ஆம் ஆண்டு இரத்து செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நடவ டிக்கை எடுத்திருந்தார்.
இதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அறிப்பை விடுத்த மஹிந்த ராஜபக்ச, இந்த சட்டத்தை இரத்து செய்வ தாக அறிவித்திருந்தார்.
கடந்த தசாப்தங்களாக இச் சட்டம் நாடாளுமன்ற த்தில் 444 தடவைகள் இடைக்கிடையே பிரேரணைகள் மூலம் நீடிக்கப்ப ட்டுவந்தது.
1947ஆம் ஆண்டின் பொதுசனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இலங்கை அர சியலமைப்பின் 76, 155 ஆகிய பிரிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவசர காலச் சட்டம் செயற்படுத்தப்பட்டது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் காரணமாக இல ங்கையில் தமிழ்பேசும் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டி க்காட்டப்படுகின்ற நிலையில் இரத்து செய்யப்பட்ட இச் சட்டம் மீண்டும் அமு லுக்கு வருகின்றமை பல்வேறு சந்தேகங்களையும், அச்சத்தையும் தோற்று வித்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனா்.