Breaking News

சிவாஜிலிங்கம் பொலிஸாரால் கைதாகி பிணையில் விடுதலை!

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலீ ஸாரால் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாா். 

கடந்த மாதம் 22 ஆம் திகதி வட்டு வாகல் கோத்தபாஜ கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்ட த்தின் போது அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு முல்லைத்த்தீவு பொலீஸாரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 26 ஆம் திகதி முல்லைத்தீவு பொலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய நாள் சிவாஜிலிங்கம் வடமாகாண சபை அமர்வு காரணமாக சமூகமளிக்கவில்லை. 

அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றில் முன்பிணை விண்ணப்பத்தினை கோரியுள்ளனர், இதனை ஏற்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் மார்ச் மாதம் 06 ஆம் திகதி குறித்த வழக்கினை விசாரணை செய்ய திகதி குறித்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 06 ஆம் திகதி குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜெனீவா சென்றுள்ள தால் அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் முன்பிணை மனு வினை ஏற்றுக்கொண்ட நீதிபதி குறித்த முன்பிணை வழங்கியுள்ளார். 

இந்த நிலையில் நேற்று (15-03-2018) மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலை யத்திற்கு பிணையாளிகளுடன் சென்ற சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலீ ஸார் கைது செய்து ஒன்றரை மணி நேர விசாரணைகளின் பின்னர் பிணை யாளிகளின் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா பிணைகளில் விடுதலையாகியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.