Breaking News

ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம்.!

பாகிஸ்தான் குடி­ய­ரசு தின கொண்­டாட்ட நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொள்­வ­தற்­காக பாகிஸ்தான் ஜனா­தி­பதி மம்னூன் ஹுசைனின் விசேட அழைப்பை ஏற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று அந்­நாட்­டுக்கு விஜயம் ஆகவுள்ளாா்.

இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டை­யி­லான நட்­பு­றவை நினை­வு­கூரும் வகையில் ஜனா­தி­பதி இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­வ­துடன், அண்மைக் கால த்தில் இலங்­கையின் அரச தலைவர் ஒரு­வ­ருக்கு இது­போன்­ற­தொரு உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பு விடுக்­கப்­பட்ட முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வென ஜனா­தி­பதிச்  செய­லகம் விவரித்துள்ளது. 

இம்­முறை குடி­ய­ரசு விழாவில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொள்ளும் ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அமோக வர­வேற்­ப­ளிப்­ப­தற்­காக பாகிஸ்தான் அர­சாங்கம் சகல ஏற்­பா­டு­க­ளையும் செய்­துள்­ள­தாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தின்­போது பாகிஸ்தான் ஜனா­தி­பதி மம்னூன் ஹுசைன் மற்றும் பிர­தமர் சஹீத்கான் அப்பாஸ் ஆகி­யோ­ரையும் ஜனா­தி­பதி சந்­திக்­க­வுள்ளார். 

இச்­சந்­திப்பின் போது இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பொரு­ளா­தார, வர்த்­தக மற்றும் கல்வி ஆகிய துறை­களில் உற­வு­களை மேலும் பலப்­ப­டுத்­து­வது குறி த்து விசேட கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. மேலும் ஜனா­தி­ப­தியின் இவ் விஜ யத்தின்போது இருநாடுகளுக்கிடையில் கல்வி மற்றும் சுற்றுலா துறையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.