Breaking News

எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்த மஹிந்த.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை மறந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்தார். இந்த சம்பவம் ஆளும் கட்சியினர் உட்பட அனைவரினதும் பாா்வையையும் திருப்பியுள்ளது. 

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மதியம் 1 மணிக்கு கூடியது. இதன்போது வாய்மூல விடைக்கான வினா நேர த்தின் போது முன்னாள் ஜனாதிபதி யும் குருநாகல் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜ பக்ஷ சபாபீடத்திற்குள் பிரவேசித்து ள்ளாா். அவரது ஆசனம் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்திற்கு அருகிலேயே உள்ளது. அதாவது எதிர்க்கட்சி தலைவர் ஆசன வரிசையின் அடுத்த ஆசன வரிசையின் முதல் ஆசனமாகும். எனினும் சபாபீடத்திற்குள் நுழைந்த மஹிந்த ராஜபக்ஷ தன்னை மறந்து எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நீண்ட நேரம் இருந்துள்ளாா். 

இச் சம்பவம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் அவதான த்தை ஈர்த்தது. கூட்டு எதிர்க்கட்சியினரும் இவ் விடயத்தை அறியாமல் அவ ருடன் பேசிக்கொண்டிருந்தனர். எனினும் பின்னர் படைகள் சேவிதர் ஒருவர் வந்து அவருக்கு நினைவூட்டியவுடன் திடீரென எழுந்து சென்று அருகிலுள்ள தனது ஆசனத்தில் அமர்ந்தாா். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொற டாவுமான அநுரகுமார திஸாநாயக்கவும் சபை முதல்வரும் அமைச்சரு மான லக்ஷமன் கிரியெல்லவும் மஹிந்த ராஜபக்ஷவைநோக்கி நகைச்சுவையாக ஏதோ தெரிவித்துள்ளனா். கூட்டு எதிர்க்கட்சியினரும் கலகலப்பாக உரையாடி யுள்ளனா். 

அதன்பின் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலையில் கைவைத்து சிரித்துக்கொண்டிருந்தார்.