Breaking News

என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன - சுதாகரன்!

தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருப்பதாக அபி விருத்தி உத்தியோகத்தரான ஜி. சுதாகாரன் தெரிவித்தார். 

வவுனியா பாவக்குளம் படிவம் 1 இல் பொது மக்களுக்கு அநீதி இழைக்கப்ப ட்டு வருவதாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம் கோருவதா கவும் அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துகள் அனைத்தும் பொய்யான குற்றச்சாட் டுக்களே என தெரிவித்துள்ள பாவக் குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரான ஜி. சுதாகரன் இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலி ஸில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார். 

பாவக்குளம் படிவம் 1 மக்கள் தமது கிராமத்திற்கு கிராம சேவகர் மற்றும் அபி விருத்தி உத்தியோகத்தர்கள் அநீதி இழைத்து வருவதாகவும் ஒரு சிலரின் கருத்துக்களை கேட்டு கிராம அபிவிருத்தி சங்கத்தினை புறக்கணிப்பதாகவும் தெரிவித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனா்.

இதேவேளை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமும் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டிருந்ததுதடன் அபிவிருத்தி உத்தியோ கத்தர் பாலியல் இலஞ்சம் கேட்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் பாவக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி. சுதாகரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது தன் மீது சுமார் 14 பேர் போலியாக பழி சுமத்தி வருவதாகவும் ஏனைய மக்கள் கிராமத்தில் தாம் செயற்படும் விதம் தொட ர்பில் அறிந்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் தான் எவவித பிழையான செய ற்பாட்டிலும் ஈடுபடாமையினால் துணிந்து பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்கள் மூலம் தன்னை அச்சுறுத்தி சிலர் தமது காரியத்தை செயற்படுத்த முனைவதற்கேயாகும் எனினும் நான் அரச விதி முறைகளை மீறி எவருக்கும் சார்பாக நடந்துகொள்ள மாட்டேன் என்பதே உண்மை எனத் தெரிவித்துள்ளாா்.