Breaking News

விசேட குழுவின் அறிக்கை இன்று பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்.!

தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய புதிய திட்­டங்கள் குறி த்தும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­க வும் ஆராய்­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்ட விசேட குழுவின் அறிக்கை இன்று பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடி­வு கள் வெளி­வந்த பின்னர் தேசிய அர­சா ங்­கத்தின் இரு பிர­தான கட்­சி­க­ளுக்கு இடையில் கடு­மை­யான முரண்­பாடு ஏற்­பட்­டது. இதன் ­பி­ர­காரம் இரு பிர­தான கட்­சி­களும் தனித்து ஆட்சி அமைக்கும் முயற்­சியில் கள­மி­றங்­கின. 

இவ் விடயம் தொடர்­பாக இரு பிர­தான கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இடைக்­கி­டையே பல்­வேறு சந்­திப்­பு­களை மேற்­கொண்­டது. இதனால் அர­சியல் ரீதி­யாக பாரிய சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் விசேட கூட்­ட­மொன்றும் அலரி மாளி­கையில் இடம்பெற்றது. 

இதன்­போது தேசிய அர­சாங்­கத்தை எவ்­வாறு வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்து செல்­வது தொடர்­பிலும் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்க வேண்­டிய மக்கள் நலன் சார்ந்த திட்­டங்­களை தயா­ரிப்­ப­தற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு 
சீ­ர­மைப்பு நட­வ­டிக்கை குறித்து ஆராயும் பொருட்­டும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் விசேட குழு­வொன்று உருவாக்கப்பட்டது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தலை­மையில் இந்த குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்தக் குழுவில் அமைச்­சர்­க­ளான அகிலவிராஜ் காரி­ய­வசம், ஹரீன் பெர்­னாண்டோ ஆகி­யோரும் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான அஜித் பீ பெரே­ரா, ருவன் விஜே­வர்­தன ஆகி­யோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். 

இதன்­படி தேசிய அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய மக்கள் நலன்சார் திட்­டங்கள் மற்றும் வெற்­றி­க­ர­மாக அர­சாங்­கத்தை கொண்டு செல்­வது தொடர்­பான புதிய வேலைத்­திட்­டங்கள் கொண்ட அறிக்கை இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது. 

அத்­துடன் இந்தக் குழு­விற்கு கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து ஆராய்­வ­தற்கும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை திங்கட்கி ழமை கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளன.