Breaking News

உள்ளூராட்சி சபைத் தேர்த்லின் பின் தலைமை. தமிழரசுக் கட்சிக்குள் விமர்சனங்கள்.!

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதாக குற்ற்ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

நிவாரண அரசியலுக்கு வாக்களிக்கா மல் கொள்கை அரசியலுக்கு வாக்க ளித்த மக்களுக்கு, தமிழரசுக் கட்சி கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லையென கட்சியின் மூத்த உறு ப்பினர்கள் சிலர் தங்களது ஆதங்கங்களைத் தெரிவி த்துள்ளனா். உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் இவ்வாறான விமர்சன ங்கள் தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலை யில், மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கமும் மஹிந்த ராஜபக்ச அரசா ங்கத்தைப் போன்றுதான் தமிழர் விடயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்பட்டது என்பதை அடித்துச் சொல்ல சம்பந்தன் தயாராக இல்லையென, கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

உள்ளூராட்சி சபைத் தேர்தல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையி லான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இரண்டு சபைகளையும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான அணி கணிசமான ஆசனங்களையும் பெற்றுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படு கின்றது.

குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் செய ற்பாடுகளை கண்டித்து நிலைமையை வெளிப்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாகவும், இல்லையேல் கட்சியில் இருந்து வெளியேறி வேறு அரசி யல் அணியுடன் இணைந்து செயப்பட தீர்மானித்திருப்பதாகவும் கட்சித் தகவ ல்கள் கூறுகின்றன.

அதேவேளை 1983இல் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம், 2009 ஆண்டு மே மாதம் அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியலில் எதைச் செய்ய வேண்டும் என்ற ஆரோக்கியமான தீர்மானத்தை முன் கொண்டு செல்ல வேண்டிய பொறு ப்பு சம்பந்தனுக்குரியது. 

ஏனெனில், அஹிம்சைப் போராட்ட காலத்திலும் ஆயுதப் போராட்ட காலத்தி லும் வாழ்ந்தவர் என்பதை விட அந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் தன்னை ஈடுபடுத்தியவர் அல்லது விமர்சிக்கப்பட்டவர் என்று கூடச் சொல்ல முடியும்.

ஆனாலும், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை செயற்ப டுத்தக்கூடிய அடுத்த தமைமை யார் என்பது தொடர்பான தயார்ப்படுத்தல் சம்பந்தனிடம் இல்லாத ஒரு கையறு நிலையைத்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் எடுத்துக் காண்பி க்கின்றன.

ஆகவே தனக்கு பின்னரான அரசியல் சூழலில், யாரும் எதிர்ப்பு வெளியிடாத, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய புதிய தலைமை ஒன்றை சம்பந்தன் உரு வாக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சீர்ப்படு த்த வேண்டுமென விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இன்று கூட்டமைப்புக்கு பலமான எதிர்க்கட்சியாக விளங்கு கின்றது.

எனவே கொள்கைப் பிரச்சினையால் பிரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறாயினும் கொள்கை ஒரு பிரச்சினை அல்ல. அது மக்களிடம் தாராளமாகவே இருப்பதாக விமர்சகா்கள் தெரிவித்துள்ளனா்.