யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுச் சந்திப்பிற்கு சமூகமளிக்காத விஜயகலா, அங்கஜன்!
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (03-03.2018) சனிக்கிழமை சற்று முன் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ் வருட ஆரம்பத்தின் [ 2018 ] அபி விருத்தி தொடர்பான முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்படவு ள்ள நிலையில் மாவட்ட ஒருங்கி ணைப்புக்குழு கூட்டத்தில் பங்கே ற்காது சமூகமளிக்காமை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்க ப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படு கிறது.
குறித்த இக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கான காரணங்கள் ஏதும் முன்வைக்கப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை, மாவட்டத்தின் அபிவிரு த்தியை தீர்மானிக்கும் இந்த அபிவிருத்திக் கூட்டத்தைவிட அவர்கள் அப்படி யென்ன பொறுப்பு வாய்ந்த கடமைக்கு சென்றவர்கள் என தெரிவிக்க வேண்டு மென அங்கு கூடியிருந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு வின் இணைத்தலைவவருமான சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண விவ சாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களான அ.பரம்சோதி, பா.கஜதீபன், உட்பட திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வுகளில் மீள்குடியேற்றம், கல்வி, நீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் தபால், வீடமைப்பு சுகாதாரம், விவசாயம், மின் விநியோகம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளு ராட்சி சபைகள், வர்த்தக தொழிற்துறை உள்ளிட்ட துறைசார்ந்த விடயங்கள் ஆராயப்படவுள்ளன.