Breaking News

இனவாதத்தை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை - முஜிபுர் ஆவேசம்

இனவாதத்தை தடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் துளியளவேனும் நடவடி க்கை எடுக்காதபடியினால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வெட்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்து ள்ளார். 

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர பல விடயங்களைத் தேடிப்பிடித்த இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்கு கண்டியில் வன்முறைகளைத் தூண்டி ய நபர்களை இனங்காண முடியா மற்போனது என்ன என்றும் கேள்வி எழுப்பினார். 

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை சபையில் எழுப்பினார். ஒருசிலர் முஸ்லிம்கள் இனவாதி கள் என கூறுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித் முஜிபுர் ரஹ்மான், அப்படியானால் நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோரும் இனவாதிகளா என்று அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

ஒருசில தேசிய பத்திரிகைகள் இனவாதத்தை இலக்காகக் கொண்டு செய்தி களை வெளியிடுவது மிகவும் ஆபத்தான விடயமாகும் நாடாளுமன்ற உறுப்பி னர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்தார்.