Breaking News

இன்­றைய விவா­தத்தில் இலங்­கை­யிடம் கேள்வி தொடுக்கவுள்ள - சர்­வ­தேச நாடுகள்.!

இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்­பாக ஆராயும் ஐக்­கி­ய­ நா­டு­களின் பூகோள காலக்­கி­ரம மீளாய்வு குறித்த விவாதம் இன்று மாலை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கை தொடர்­பான பர­ப­ரப்­பான கருத்­தா­டல்­க­ளுக்கு மத்­தியில் இன்­றைய விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இவ் விவா­தத்தில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் பிர­தி­நி­திகள், புலம் பெயர் தமிழ்­மக்­களின் பிர­தி­நி­திகள், இலங்கை அர­சாங்­க த்தின் அதி­கா­ரிகள், பாதிக்­கப்­பட்ட மக்கள், சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பினர் பங்கேற்க வுள்ளனா். 

முதலில் விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் பிர­தி­நி­திகள் உரை­யாற்­ற­வி­ருக்­கின்­றனர். இதன்­போது இலங்­கை­யா­னது கடந்த நவம்­பர்­மாதம் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பூகோள காலக்­கி­ரம மீளாய்வு குறித்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­ற­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­ப­ட­வுள்­ளது. 

அத்­துடன் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கை­யிடம் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளனர். இந்த விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்ள அமெ­ரிக்கா, பிரிட்டன், கனடா உள்­ளிட்ட நாடுகள் இலங்கை ஏன் இது­வரை பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­பதில் தாம­தத்தை வெளிக்­காட்­டுக்­கின்­றது என்ற கேள்­வியை எழுப்­ப­வுள்­ளனர். 

 அத்­துடன் இலங்கை இந்த விட­யத்தில் விரைந்து தனது அர்ப்­ப­ணிப்பை காட்­ட­வேண்­டு­மென இந்த நாடுகள் வலி­யு­றுத்­த­வுள்­ளன. அதே­போன்று சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இந்த விவா­தத்தில் உரை­யாற்­ற­வுள்­ளன. இதன்­போது பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் முன்­னெ­டுக்­க­வேண்டுமென வலி­யு­றுத்­த­வுள்­ளன. 

மேலும் இன்­றைய தினம் ஜெனி­வாவை வந்­த­டை­ய­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன மற்றும் கருத்­திட்ட அமைச்சர் சரத் அமு­னு­கம உள்­ளிட்ட தூதுக்­கு­ழு­வி­னரும் இந்த விவா­தத்தில் பங்­கேற்­க­வுள்­ளனர். 

இலங்கை அர­சாங்கம் பூகோள காலக்­கிம மீளாய்வு அறிக்­கையின் பரிந்­து­ரை­களை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்பதை அமைச்சர்கள் இருவரும் வெளியிடவுள்ளனர். 

இன்று ஜெனிவா வரவுள்ள அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் இன்றைய தினம் நடைபெறும் விவாதம் மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள விவாதம் போன்ற விடயங்களில் பங்கேற்கவுள்ள னா்.