Breaking News

நல்லிணக்கத்திற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் - ஜெனிவாவில் திலக் மாரப்பன.!

இலங்­கையில் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூற­லையும் ஏற்­ப­டுத்த அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் உள்ளதாக வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன நேற்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் தெரி­வித்துள்ளாா்.

ஜெனிவா மனித உரிமை பேர­வை யில் நேற்று நடை­பெற்ற இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்­தான விவா­தத்தில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளாா். 


2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்­குள்­ளான பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவா­தமே இவ்­வாறு நடை­பெற்­றுள்ளது. 

திலக் மாரப்­பன தனது உரையில் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் நான் அமை ச்­சர்­க­ளா­ன­ சரத் அமு­னு­கம மற்றும் பைஸர் முஸ்­தபா ஆகி­யோ­ருடன் வந்தி?ருக்­கின்றேன். இலங்­கையில் சட்டம் ஒழுங்கு சரி­யாக செயற்­ப­டு­கி­றது. மனித உரிமை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்துள்ளோம். 

காணாமல் போனோர் குறித் து ஆராய அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 70 வீத­மாக காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. நட்ட ஈடுகள் வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு உருவாக்கப்படவுள்ளது. 

பயங்­க­ர­வாதம் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு புதிய சட்­ட­மூலம் கொண்டு வரப்­படும். அண்­மைய காலங்­களில் ஏற்­பட்ட வன்­மு­றைகள் தொடர்பில் கவலை அடை­கிறோம். இதன் பின்னர் இவ்­வாறு வன்­மு­றைகள் ஏற்­பட இடமளிக்க மாட்டோம். 

இலங்கையில் அனைவரும் சமஉரிமையுடன் வாழ உரிமையுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடு த்துள்ளோம்.