Breaking News

ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பாளர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடாது - ஐ.தே.கட்சி.!

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டித்த பின் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

இல்­லையேல் அர­சியல் ரீதி­யாக தீர்க் ­க­மான முடி­வினை எடுக்க நேரிடு மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் செயற்­குழு கூட்­டத்தில் பிர­த­ம­ரிடம் எடுத்­து­ரைத்­துள்­ளனர். 

அத்­துடன் அடுத்த ஜனா­தி­பதி தேர்­த லின் போது பொது வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்கக் கூடாதென ஐக்­கிய தேசியக் கட்சி ஒரு­வ­ரையே வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவித்துள்ளனா். 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது. இதன்­போது தானும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இவ்­வாறு கட்­சியின் தலை­வ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்­த­தாக இரா­ஜாங்க அமைச்சர் சுஜிவ சேன­சிங்க ஊட­கங்­க­ளுக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்துள்ளாா். 

அவர் மேலும் தெரிவிக்கையில்......,

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்கும் யோச­னைக்கு ஐக்­கிய தேசி யக் கட்­சியின் செயற்­குழு பூரண அங்­கீ­காரம் வழங்­கி­யது. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டித்த பின்னர் கட்­சியில் மறு ­சீ­ர­மைப்பு செய்­வ­தற்கு தீர்­மா­னித்தோம். 

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டித்த பின் ஏப்ரல் மாதம் 5,6,7 ஆம் திக­தி­களில் மறு ­சீ­ர­மைப்பு குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும். அதன்­ பின்னர் பூரண மறு­ சீ­ர­மைப்பை மேற்கொள்வதாக தீா்மானிக்கப்பட்டுள்ளது. 

எவ்­வா­றா­யினும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு இல்­லா ­விட்டால் அர­சியல் ரீதி­யாக தீர்க்­க­மான முடி­வினை எடுப்போம் என நானும் எமது கட்­சி­யினர் பலரும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எடுத்­து­ரைத்­துள்ளனா். 

அத்­துடன் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாக வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்த வேண்டும். இனி­ மேலும் பொது­ வேட்­பா­ளர்­களை களமிறக்குவது எமது கட்சிக்கு நல்லதல்ல. 

ஆகவே பொது வேட்பாளர்களுக்கு இனிமேல் ஆதரவு வழங்க கூடாது என அனைவரும் கோரினோம். எத்தகையவராக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரையே ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.