Breaking News

முது­கெ­லும்பு இருந்தால் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.!

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க தைரி­யம் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு­போதும் ஆட்­சி­யினை கைப்­பற்ற முடி­யாது.

தைரியம் இருந்தால் அவர்கள் கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஆட்­சி­யினை கைப்­பற்றிக் காட்­டட்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமை ச்சர் பைசர் முஸ்­தபா சவால் விடுத்து ள்ளாா். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடைபெற்றபோது இதில் கலந்­து­ கருத்து வழங்கிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்து ள்ளாா். 

மேலும் விவரிக்கையில்......,

ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் இந்த அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு வெறும் வாய் வார்த்­தை­க­ளினால் கதை­களை கூறிக்­கொண்­டுள்­ளனர். எனினும் ஸ்ரீல ங்கா சுதந்­திர கட்சி இல்­லாமல் அவர்­க­ளினால் ஆட்­சியில் அங்கம் வகிக்­கவே முடி­யாது. 

அடுத்த தேர்­தலில் அவர்­களின் தனி அர­சாங்­கத்தை அமைக்­க­வுள்­ள­தா­கவும் பொது வேட்­பாளர் இல்­லாமல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னரை வேட்­பா­ள­ராக்கும் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ள­தா­கவும் கூறு­கின்­றனர். ஆனால் அவர்­க­ளினால் கட்சி வேட்­பா­ளரைக் கொண்டு ஒரு­போதும் ஆட்­சி­யினை கைப்­பற்ற முடி­யாது. 

அவ்­வாறு முடிந்­தி­ருந்தால் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் அவர்கள் பொது வேட் ­பாளர் ஒரு­வரை கள­மி­றக்க முயற்­சித்­தி­ருக்க மாட்­டார்கள். மேலும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்க அவர்­மீது இருந்த பாசமோ பற்றோ காரணம் அல்ல. 

அப்­போ­தி­ருந்த நிலையில் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்கு வர­வேண்டும் என்ற நோக்­கமே அதற்­கான கார­ண­மாகும். அதற்­கான சரி­யான தெரி­வாக மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாக இருந்­த­மை­யி­னா­லேயே அவரை பொது வேட்­பா­ள­ராக்­கினர். 

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எதிர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி என்ற அடிப்­ப­டை­யி­லேயே போட்டி நில­வி­யது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் வெற்றி பெறு­வாரா அல்­லது கட்­சியின் செய­லாளர் வெற்­றி­பெ­று­வாரா என்­பதே போட்­டி­யாக இருந்­தது. 

இதில் ஜனா­தி­பதி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தோளில் தொங்­கிக்­கொண்டு ஆட்­சிக்கு வந்த ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் இன்று தமது வீர வார்த்­தை­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றமை எமக்கு வேடிக்­கை­யாக உள்­ளது. கடந்த பொதுத் தேர்­த­லிலும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பெரும்­பான்மை ஆத­ரவு கிடைக்­க­வில்லை. 

ஒரு ­வேளை அவ்­வாறு பெரும்­பான்மை ஆத­ரவு கிடைத்­தி­ருந்தால் அவர்கள் தேசிய அர­சாங்­கத்தை கலைத்து தனி ஆட்­சி­யினை உரு­வாக்­கி­யி­ரு­ப்பார்கள். அவர்­களின் சுய­ரூபம் வெளிப்­பட்­டி­ருக்கும். எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. 

கடந்த இரண்டு தேர்­தல்­களின் போதும் அவர்களினால் பொது வேட்பாளர் ஒருவரையே நம்பியிருக்க வேண்டிய நிலைமை இருந்தது. இனியும் அவ் வாறே அமையும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளுக்கு முதுகெலும்பு இருக்குமாயின் அவர்கள் தனி வேட்பாளரை களமிறக்கி ஆட்சியினை கைப்பற் றலாமெனத் தெரிவித்துள்ளாா்.