Breaking News

"போர்க்­குற்­ற நிரா­க­ரிப்பிற்கான எமது நிலைப்­பாட்டை இவ்வாண்டும் விவரிப்போம்"

போர்க்­குற்­றங்­களை நிரா­க­ரிக்கும் எமது நிலைப்­பாட்டை இம்­மு­றையும் ஜெனி­வாவில் தெரி­விப்போம் என எலிய அமைப்பின் பிர­தி­நி­தி­யாக ஜெனிவா செல்­ல­வுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர தெரி­வித்தார். 

எதிர்­வரும் 16 ஆம் திகதி அவர் ஜெனிவா செல்­ல­வுள்­ள­தா­கவும் அறி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்­றது. 

இந்­நி­லையில் முன்னாள் பிரதி அமை ச்சர் சரத் வீர­சே­கர எலிய அமைப்பின் பிர­தி­நி­தி­யாக ஜெனிவா செல்­ல­வுள்­ள­தாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வின­வியபோதே அவர் மேற்கண்­ட­வாறு தெரிவித்துள்ளாா். 

 மேலும் விவரிக்கையில், 

இம்­மு­றையும் எலிய சார்பில் நான் ஜெனிவா பய­ண­மா­கின்றேன். எதிர்­வரும் 16 ஆம் திகதி பய­ண­மாக நினைத்­துள்ளேன். இம்­மு­றையும் நாங்கள் எமது நிலைப்­பாட்­டினை உறு­தி­யாக தெரி­விக்க வேண்டும். ஏனெனில் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­வு­ட­னேயே இலங்­கையின் சர்­வ­தேச தரப்­பிடம் அடி­ப­ணிய வைத்­து­விட்­டது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்­கையில் புதிய அர­சியல் அமைப்பு கொண்­டு­வ­ரப்­படும், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படும், காணா­மல்­போனோர் காரி­யா­லயம் அமைக்­கப்­படும் என்ற வாக்­கு­று­தி­களை கொடுத்தும் யுத்தக் குற்­றங்கள் குறித்து விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கியும் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­து­விட்­டது. 

ஆகவே இலங்கை அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத வரையில் சர்­வ­தேசம் தொடர்ச்­சி­யாக இலங்­கைக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூல­மாக தமது தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ளும் நடவ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை. 

எவ்­வாறிருப்­பினும் நாம் தொடர்ச்­சி­யாக எமது இரா­ணு­வத்தை காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இம்­மு­றையும் நாம் இல ங்கை இரா­ணு­வத்தை காப்­பாற்றும் வகையில் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்போம். 

ஜெனி­வாவில் எமது கரங்­களை பலப்­ப­டுத்தும் தரப்பை சந்­தித்து அவர்­களின் ஆத­ர­வி­னை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுப்போம். சர்­வ­தேச சிங்­கள அமைப்­புகள், சிங்­கள மக்­களை சந்­தித்தும் எமக்கு ஆத­ர­வான நகர்­வு­களை முன்­னெ­டுக்க அழுத்தம் கொடுப்போம். 

எமது இரா­ணு­வத்தை தண்­டிக்கும் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுக்க இட­ம­ளிக்கமாட்டோம். அதற்­கான குர­லா­கவே நாம் ஜெனி­வா வில் கருத்­துக்­களை வெளி­ப்ப­டுத்தி வரு­கின்றோம். இந்த அர­சாங்கம் முன்­னெ ­டுத்த தேசத்­து­ரோக செயற்­பாட்டை நாம் சாதா­ர­ண­மாக விடப்­போ­வ­தில்லை. 

எமது ஆட்­சியில் இவர்கள் அனை­வ­ரையும் கண்­டிப்­பாக தண்­டிப்போம். இன்று இரா­ணு­வத்தை குறை­கூறும் நபர்கள், சர்­வ­தேச நாடு­களில் இருந்­து­கொண்டு புலி­களை ஆத­ரிக்கும் நபர்கள் இலங்­கையை பழி­தீர்க்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

எனினும் பிரித்­தா­னி­யாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கையில் இலங்கை யின் தேசியக் கொடியை தரையில் வீசி கால்களால் மிதித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இவை அனைத்துமே இலங்கையில் ஒற்றுமை யாக வாழும் தமிழ்–சிங்கள மக்கள் மத்தியிலேயே முரண்பாடுகளை தோற்று விக்கும் என்பதை மறந்துவிடலாகாதெனத் தெரிவித்துள்ளாா்.