காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக தலைவராக - சாலிய பீரிஸ்.!
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார்.
அதன்பிரகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்க ப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜயதீபா புன்னிய மூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி ஏ. பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிரக் ரஹீம், சோம ரிசி கேலியனகே மற்றும் கணபதி ப்பிள்ளை வேந்தன் ஆகியோர் பிரதி நிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக சட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட போதும், குறித்த அலுவலகம் தற்போதே நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








