Breaking News

அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய் என அணி திரண்ட மக்கள்!

கிளிநொச்சியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சி தானந்தம் ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம், அரசியல் கைதியின் பிள்ளைகளினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனா திபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்ய ப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி வியாழக்கிழமை சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்துள்ளாா். 

உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற போது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அர சியல் கைதி ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலங்கள் மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 

இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த நிலையில் அரசியல் கைதியை பொலி ஸார் மீண்டும் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட போதே அவரது மக ளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் மக்கள் மத்தி யில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. 

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்தும் வாழ்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு இரு பிள்ளைகளும் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். 

குறித்த கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசியல் கைதி யான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று கிளிநொச்சி பொது சந்தை முன்பாக கையெ ழுத்து திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது, வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடு தலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கான செயற்திட்டம் இன்று காலை பத்துமணிக்கு விஸ்வமடுப் பகுதியில் தமிழ் இளைஞர் சமூகத்தினால் ஆரம்பித்து வைக்க ப்பட்டுள்ளது. 

ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணைமனுக்கள் அனுப்புவதன் மூலம் சீக்கிரப்படுத்த முடியும் என்ற சட்ட வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்க ளிடம் கருணை மனுக்கள் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பும் செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த செயற்திட்டத்தில் கிளிநொச்சி வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமாலை அம்பாறை ஆகிய மாவட்ட ங்களில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களும் மாதிரி கருனை மனுக்களை பெற்று கையெழுத்திட்டு ஏற்பாட்டாளர்களிடம் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச் செயற் திட்டமானது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பொது அமை ப்புக்கள் இளைஞர் அமைப்புக்கள் என வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அமைப்புக்களுக்கும் நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டு கையெழுத்து இடப்பட்டு ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளனா்.