Breaking News

ஸ்ரீலங்கா அரசிற்கு இரா.சம்பந்தன் இறுதி எச்சரிக்கை!

ரணில் – மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலும் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக் கள் தமக்குரிய வழியை வகுத்துக் கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரி வித்துள்ளார். 

தமிழ் மக்களுக்கான அர்த்தபுஷ்டி யான தீர்வை பெற்றுக் கொடுப்பதற் கான பொறுப்பு இந்தியாவுக்கு உள்ள தாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இதற்கான அழுத்தங்களை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா தொடர்ச்சி யாக வழங்க வேண்டுமென  வலியுறு த்தியுள்ளாா். 

இந்திய பத்திரிகையாளர் ரி. இராமகிருஷ்ணன் எழுதிய ஓர் இனப் பிரச்சினை யும், ஓர் ஒப்பந்தமும் என்ற நூல் அறிமுகவிழா கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. 

இதில் பிரதம அதிதியான எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட-கிழக்கு மாகாண முன்னாள் முத லமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள், முன்னாள் இந்து கலாசார இராஜாங்க அமைச்சர் தேவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனா். 

இதேவேளை வார்த்தைகள் திருப்தி அளிக்காவிட்டாலும், புதிய அரசியலமை ப்பில் உள்ள விடயங்கள் ஓரளவு திருப்தியளிக்கக்கூடிய வகையில் அமைந் திருப்பதால் தமிழர்கள் அனைவரும் இச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன் படுத்திக்கொள்ள ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், மிக விரைவில் புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் தாமதமின்றி தொடரவேண்டுமென எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.