Breaking News

மைத்திரி நாடு திரும்பியதும் அடுத்த கட்ட நடவடிக்கை ; பிரதமர் ரணில்! (காணொளி)

நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை பலப்படுத்துகின்ற செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து ள்ளார்.

லண்டனிற்கு விஜயமாகியுள்ள ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் சந்தித்து விசேட பேச்சுக்களையும் நடத்த எதிர்பார்த்து ள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள் ளாா். தமிழ் – சிங்கள சித்திரை புது வருடத்தை முன்னிட்டு அரச தலை வர்களின் சம்பிரதாயங்களில் ஒன் றான கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன் கிழமை காலை கண்டிக்கு பயணமாகியுள்ளாா்.

தலதா மாளிகையில் வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின் பௌத்த மக்க ளின் பெருமதிப்பிற்குரிய மதத் தலைவர்களான அஸ்கிரிய மற்றும் மல்வத் துப்பீட மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக பிரதமர் சென்றுள்ளாா். 

இச் சந்திப்புக்களை நடத்திய பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்க ளுக்கு கருத்து வெளியிட்டார். “புதுவருடத்தின் சம்பிரதாயங்களை நிறைவு செய்து தலதா மாளிகைக்கு இன்று வந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண் டேன்.

அதேபோன்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்று கல்நதுரையாடலையும் நடத்தினேன். முதலாவது இந்த நாட்டில் நல்லிணக்கம், சமாதானத்தை பலப்படுத்த செயற்பட வேண்டும். பழைய வரு டத்தைப் போன்று துரதிஷ்ட சம்பவங்கள் இல்லாமல் நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும்.

ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் இருந்து பலன்களைப் பெற்றுக் கொள்ளும் காலம் இது. சில வேவைத்திட்டங்களை நிறைவுசெய்யப்படவுள்ள தோடு மேலும் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதுதொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் புதிய திட்டத்தின் ஊடாக முன்செல்ல எதிர்பார்க்கின்றோம்.

கடந்த வருடத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தோம். குப்பை மேடு சரிவு, வெள்ளம், வரட்சி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. எவ்வாறாயினும் சிங் கள தமிழ் புதுவருடப் பிறப்பு காலத்தில் சாதாரண விலைகளில் பொருட்களை வழங்க கிடைத்தது.

இவ் வேலைத்திட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்” என்றார். இதேவேளை, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 6 முன்னாள் அமைச் சர்கள் தங்களுடன் மேலும் பலர் ஒன்றிணைந்த எதிரணியை பலப்படுத்துவ தற்காக அடுத்த நாடாளுமன்ற அமர்வில் எதிரணியில் அமர்வதற்கு உத்தேசித் திருப்பதாக தெரிவித்துள்ளனா்.

 இது தவிர, எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன் றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனா்.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெ ல்லவிடம் ஊடகவியலாளர்கள் வினவினர். “அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட் டால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

அன்று அதனை பார்த்துக் கொள்வோம். நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 25 பேர் ஆதர வளிப்பார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களிப்பிலிருந்து விலகிக் கொள்வார்கள் என்றும் பலதும் பேசினார்கள்.

இறுதியில் என்ன நடந்தது? ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினராகிலும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. எமது கட்சியிலுள்ள அனை வரும் வாக்களிப்பில் கலந்துகொண்டார்கள். எதையாகிலும் சொல்வதற்காக எதையாகிலும் கூறுவார்கள். அவர்களது ஆதரவாளர்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் தெரிவிக்கலலாம்” எனத் தெரிவித்துள் ளாா்.