Breaking News

லண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அழைப்பு - ஜனாதிபதி.!

உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற் கொள்ளப்படும் முயற்சிகள் தாய்நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடை யாக உள்ளதென ஜனாதிபதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களிடம் விவ ரித்துள்ளாா். 

தாய் நாட்டின் உண்மையான நிலை மைகள் பற்றிய சரியான புரிந்துணர் வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பய ணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி, அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பொது நலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநா ட்டில் கலந்து கொள்வதற்காக லண்ட னுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் லண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்ற போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்விமான்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல் வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அமோக வர வேற்பு வழங்கியுள்ளனா்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை யும் ஸ்தாபித்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதில்லையெனத் தெரிவித்துள்ளாா். 

சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் மற்றும் வர்த் தக நோக்கங்களுடன் உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்வதற்கு முயற்சிப்பதே இதற்கான முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் சகல துறை சார்ந்தவர்களும் தற்போ தைய அரசாங்கத்தின் கீழ் தாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரம் பற்றிய சரி யான புரிந்துணர்வுடன் செயற்படவில்லையெனத் தெரிவித்துள்ளாா். 

கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள் ளக்கூடிய சகல பொறுப்புக்களையும் உயரிய மட்டத்தில் நிறைவேற்றுவதற் காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதென வலியுறுத்திய ஜனாதி பதி, நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி, நாட்டில் நில வும் அமைதியான சூழலை நிரந்தரமாகப் பேணுவதற்கு முன்னுரிமையளித்து தமது அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளாா். 

மேலும், நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செல்வதோடு மக்களின் பொருளா தாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார திட்டங்க ளினால் தற்போது சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளதுடன், நாட்டுக் கெதிராக காணப்பட்ட சர்வதேசத்தை மீண்டும் நாட்டை நோக்கி கொண்டுவர முடிந்து ள்ளமையானது கடந்த மூன்று வருடங்களுக்குள் பெற்றுக்கொண்டுள்ள முக் கிய வெற்றியெனத் தெரிவித்துள்ளாா்.