சம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் - கபே அமைப்பு
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்த னின் இரட்டை வேடமே தேசி அரசா ங்கத்தில் தற்போது சிதைவினை ஏற் படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டிய கபே அமைப்பின் நிறைவேற்று பணி ப்பாளர் கீர்த்தி தென்னகோன் தற்போ தைய அரசியல் பிரமுகர்கள் தேவை யானபோது அரசாங்கமாகவும் தேவைகள் முடிவடைந்தவுடன் அர சாங்கத்தின் எதிர்த் தரப்பாகச் செயற்பட்டு வருவதாக தெரி வித்துள்ளாா்.
நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலை மற்றும் கூட்டு எதிர்கட்சியி னரின் நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு விவரித் துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்....,
தேசிய அரசாங்கம் ஆட்சியை நிலைநிறுத்தி தற்போது 4 வருடங்கள் பூர்த்திய டையும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்த காலத்திலிருந்து விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த விமர்சனங்களை தாண்டி நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போது ஆட்சி சிதைவடைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஒருபோதும் எதி ர்க்கட்சி பதவியினை வகித்ததில்லை. தனக்கு தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடனும் தேவைகள் நிறைவேறியதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றாா்.
இது எதிர்க்கட்சி தலைமை பதவிக்கு பொருத்தமான பண்பல்ல.
இந்த அரசாங் கத்தின் ஆட்சித்தலைமைத்துவத்தின் பிரதான கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி யாக கணப்படுவதோடு பெரும்பான்மை விருப்பை வென்ற கட்சியாகவும் காணப்படுகின்றது. இதேவேளை ஸ்ரீ லங்கா சதந்திர கட்சிக்கும் ஆட்சி பொறு ப்புகள் சமமாக வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பி க்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் ஆதரவு அளித்திருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்த தன் பின்னர் அமைச்சு பொறுப்புக்களை துறப்பதாக தெரிவித்துள்ளனா்.
அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சிகளை செய் யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ் வாறானவொரு நிலை ஊருவாவதற்கு அர சியல் முக்கியஸ்தர்களின் இர ட்டை வேடங்களே காரணமாகும்.
இதேவேளை தனது பிழைகளை கருத்தில் கொள்ளாமல் நாட்டின் தலைவர் ஜனாதிபதியை குற்றம்சாட்டும் நிலைகளும் உருவாகியுள்ளன. அரசியல் வாதி கள் இரு பக்கமும் செயற்பட நினைக்கும் போது பொறுப்புள்ள அரசங்கத்தினை உருவாக்குவது சிரமமாவதோடு அரசாங்கத்தின் உறுதித்தன்மையும் சிதை வடையும்.
இரா. சம்பந்தன் தனது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வத ற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றாரே தவிர வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்காகவோ அல்லது மக்களின் ஏனைய பிரச்சினை களுக்காகவோ அரசாங்கத்திடம் கைகோர்க்கவில்லையெனத் தெரிவித்துள் ளாா்.







