இன்று இலங்கைக்கு விஜயமாகும் ஈரான் சபாநாயகர் .!
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் சபாநாயகர் எச்.ஈ.அலி லரிஜனி தலைமையிலான குழுவினர் இன்று இலங் கையை வந்தடையவுள்ளனா்.
இவ்வாறு இலங்கைக்கு வருகை தர வுள்ள குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உள்ளிட்ட பிரதான அரசியல் தலைவர்களை சந்திக்கவுள் ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த குழுவி னர் நாளை பாராளுமன்றத்திற்கு விஜ யத்தை மேற்கொண்டு சபாநாயகருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்போது, இருதரப்பு உறவுகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.
ஈரான் சபாநாயகர் உள்ளிட்ட குழுவினரின் இலங்கை விஜயமானது பல்துறை சார் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்திற்கு முக்கியமான மைல் கல்லாக அமையும் என இவ்விஜயம் தொடர்பில் அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.