Breaking News

2019 பொது­ந­ல­வாய உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­களின் மாநாடு இலங்­கையில்.!

பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­ற உறுப்­பி­னர்­களின் அடுத்த மாநாட்டை 2019ஆம் ஆண்டு இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு தெரிவித்­துள்­ளது. 

இது தொடர்­பாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு விடு த்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் அடுத்த வரு­டத்­துக்­கான மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. 

பொது­ந­ல­வாய மாநாட்டின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஒன்­றி­யத்தின் செயற்­குழு கூட்­டத்­திலே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. பொது­ந­ல­வாய மாநாட் டின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஒன்­றி­யத்தின் செயற்­குழு கூட்டம் கடந்த 13ஆம் திகதி நடை­பெற்­றது. 

இதில் கலந்­து­கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம், அடுத்த வருட மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு ஒன்­றி­யத்தின் இணக்­கப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

2017ஆம் ஆண்டு மோல்ட்டா நாட்டில் இடம்­பெற்ற பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்­தபா, 2019 ஆம் ஆண்டில் இடம்­பெ­றக்­கூ­டிய மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார். 

அமைச்­சரின் வேண்­டு­கோளை பரி­சீ­லனை செய்த குறித்த ஒன்­றியம் அதற்­கான அனு­ம­தியை தற்­போது வழங்­கி­யுள்­ளது. பொது­ந­ல­வாய மாநாட்டு நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் மாநாடு ஆசிய நாடொ ன்றில் இடம்பெற இருப்பது இதுவே முதல் தடவையாகும். உலகில் 10 வலய ங்களை மத்திய நிலையங்களாகக்கொண்டு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.