Breaking News

மே-18 நிகழ்விற்கு போட்டியிடும் அரசியல்வாதிகள் உயிர் தப்பிய மக்களை திரும்பி பாா்ப்பதில்லை!

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரூம் நிகழ்வை நட த்துவதற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் முள்ளிவாய்க்கால் கொடூ ரத்திலிருந்து உயிர் தப்பி வாழ்வாதார உதவிகளுக்காக காத்திருக்கும் மக் களை கண்டு கொள்வதில்லையென ஊடகவியலாளர் உதயராசா சாளின் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளாா். 

இறுதி கட்டப் போரில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட அவலங்கள் மற்றும் போரில் இருந்து மீண்டு வந்த மக்க ளுடைய கதைகள் அவர்களின் அனுப வங்களை உள்ளடக்கிய முள்ளிவாய் க்கால் பதிவுகள் எனும் நூல் அடையா ளம் கொள்கை ஆய்வுக்கான நிறுவ னத்தால் நேற்றைய தினம் யாழ்ப்பா ணத்தில் நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் பதிவுகள் என்ற நூல் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு யாழ்.பொது நூலகத்தில் அடையாளம் நிறுவனத்தின் தலைமை ஆய் வாளர் தர்சா ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் இருந்து உயிரு டன் மீண்டு வந்த மக்களின் பிரதி நிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோ ரின் உறவுகளின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வெளியீட்டிற்கான வைப்பதற்கான காரணத்தை அடையாளம் அமைப்பின் பிரதிநிதி விரிவுபடுத்தியுள்ளாா். 

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகந்தினி தெய்வேந்திரம் இவ்வா றான நூல்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளாா். 

இதனையடுத்து அங்கு உரையாற்றிய ஊடகவியலாளர் உதயராசா சாளின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக நடைபெற்றுவரும் அரசியல் போட்டி குறித்து தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளாா். 

அது மாத்திரமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரூம் நிகழ்வை நடத்துவதற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் முள்ளிவாய்க்கால் கொடூரத்திலிருந்து உயிர் தப்பி எந்தவித வாழ்வாதார உத விகளும் இன்றி உதவிகளுக்காக காத்திருக்கும் மக்களை கண்டு கொள்வ தில்லையென மேலும் தெரிவித்துள்ளாா்.