தமிழர்கள் வாழக்கூடாது என்பதற்கான இன அழிப்பே முள்ளிவாய்க்கால் பேரவலம்!
தமிழர்களே வாழக்கூடாது என்ற பாணியில் இரசாயனக்குண்டுகளாலும், பல் வேறு எறிகணைகளாலும் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால் பேரவலமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.
தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு பல்லாயிரக் கணக்கா னவர்கள் உயிரிழந்தும், ஆயிரக் கண க்கானவர்கள் காயமடைந்து, உறவு கள் அழிக்கப்பட்ட நாளின் கோர முகமே மே18.
ஒன்பது ஆண்டுகளு க்கு முன்னர் இலங்கையில் தமிழ ர்களே வாழக்கூடாது என்ற பாணி யில் இரசாயனக் குண்டு களாலும், பல்வேறு எறிகணைகளாலும் தஞ்சமடை ந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக்குதலே முள்ளி வாய்க்கால் பேரவலம்.
இத்தாக்குதலில் வயது வேறுபாடின்றி பல்லாயிரம் உயிர்கள் மடிந்தன. பச் சிளம் குழந்தைகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனை வரினதும் ஆத்மா சாந்திபெற வேண்டியும், நடைபெற்ற இக் கொடுமையான செயலுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று முன்னெடுக்கப்படும் அஞ்சலி நிகழ் விற்கு என்றும் எமது இணையம் சாா்பில் தலை சாய்க்கின்றோம்.