வற்றாப்பளைக்கு பயணித்த பக்தர்களை வழி மறித்து கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி!
வவுனியாவிலிருந்து பரந்தன் முல்லைத்தீவு ஏ35 வீதியூடாக வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து இன்று (28-05-2018) மாலை பரந்தன் வழியாக வற் றாப்பளை அம்பாள் ஆலயத்திற்கு வாகனம் ஒன்றில் பயணித்த பக்தர் களை மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் வாகனத்தை வழி மறித்து, வாகனத்தில் பயணித்தவர்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி, வாகனத்தின் திறப்பு என்பவற்றையும் பறித்துச் சென்றுள் ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதுடன் தர் மபுரம் பகுதி இளைஞர்களும் அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் ஜீவராசா ஆகியோரும் இணைந்து குறித்த குழுவினரை துரத்திச்சென்று சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் இரண்டு பேரையும் மடக் கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்தவாறு உள்ளனா்.