உறவுகளை இழந்த அந்த நாளை தமிழர்கள் ஒரு போதும் மறக்கப் போவதில்லை!
முள்ளிவாய்க்காலில் எம் உறவுகளை இனச்சுத்திகரிப்பு செய்து இனப்படு கொலையாக அழிக்கப்பட்ட அந்த நாளை தமிழ் உறவுகள் ஒரு போதும் மறக் கப் போவதில்லை.
முள்ளிவாய்க்கால் படுகொலை தின த்தை காரைதீவில் துக்கதினமாக அனு ஷ்டிப்போம் எனவும் பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெய சிறில் தெரிவித்துள்ளார்.
மே-18 அன்று காரைதீவில் பாலையடி பிள்ளையார் கோயில் வீதி (காரை தீவு- 08) இல் அமைந்துள்ள பல்தேவைக்கட்டிடத்தில் பிற்பகல் 4 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தின நிகழ்வொன்றை நடாத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
அந்நிகழ்வில் பங்கேற்குமாறு பொது அமைப்புக்களையும், விளையாட்டுக் கழகங்களையும், சமயம் சார்ந்த அமைப்புக்களையும், இளைஞர்கள், யுவதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில்.,
மே-18 அன்று முள்ளி வாய்க்காலில் எம் உறவுகளை இனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட அந்த நாளை தமிழ் உறவுகள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.
தமிழரின் துக்கதினமான அந் நாளை இவ் வருடமும் காரைதீவு மட்டுமன்றி, கிழக்கு மாகாண தமிழ் உறவுகள் அனைவரும் அனுஷ்டிப்போம் என தாழ்வாக வேண்டுகிறேன்.
வடக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையான மே-18ம் திகதி தமிழின அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய துக்கதினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று கிழக்கிலுள்ள தமிழ் கிராமங்களிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள், சமயம்சார்ந்த அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மே 18-ம் தினத்தை தமிழரின் துக்க தினமாக அனுஷ்டித்து தமிழரின் இனப்படுகொலையை நினைவு கூரலாம்.
அதே போன்று அனைத்து தமிழ்பிரதேசங்களிலும் தமிழனின் இனப்படு கொலையை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுமென்பது எனது அவா. இதனை முடிந்தவரை செயற்படுத்துவோமெனத் தெரிவித்துள்ளாா்.