உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக - தயா கமகே ..!
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்துள்ளாா்.
மேலும், 2020 ஆம் ஆண்டிலே ஜனாதி பதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இத ற்கான அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே வெளிவரும். ஆனால் தற்போதே ஜனாதிபதி தேர்தலுக்கான களம் தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்காது, ஐ.தே.வை. சார்ந்த ஒருவரையே களத்தில் இறக்கும்.
இதன்படி கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாவை கள மிற க்குவதா அல்லது சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து கட்சியின் முடிவை உரிய நேரத்தில் அறிவிப்போம் எனத் தெரிவித் துள்ளாா்.