அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு சவால் விடுத்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம்!
வடமாகாணசபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுவதும், தலை கீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினையெனத் தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதற்காக நடவடிக்கை எடுக்க முடிந்தால் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார எடுக் கட்டும் பார்க்கலாமெனச் சவால் விடுத்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறி த்து இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப் பில் முள்ளிவாய்க்கால் நினைவேந் தல் தினத்தன்று வடமாகாணசபை யின் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டமை தொடர்பில் நடவடி க்கை எடுக்கப்படுமென சட்டம் ஒழு ங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கருத்து தொடர்பாக பதிலளி க்கையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு பதிலளித்துள்ளாா்.
தமிழின அழிப்பு நாளான மே 18 ஆம் திகதி வட மாகாணத்தினால் துக்க தின மாக அறிவிக்கப்பட்டு தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கமைய வட மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகளிலும் வட மாகாண சபையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.
இதற்கு தென்பகுதியிலுள்ள சிங்கள ஊடகங்களும், சிங்கள பௌத்த பேரின வாத தரப்பினரும், மஹிந்த அணியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தி ருந்ததுடன் வட மாகாண சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு மென தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில் வட மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் ஏற்றிய வடமாகாண சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் தெரிவித்துள்ளாா்.
அமைச்சரின் இக் கூற்றுக்கள் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன் றைய தினம் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்ட வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.