Breaking News

இராஜீவ் காந்தி நினைவு தினம் அனுஸ்டிப்பு !

சரியாக 26 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில்.. ஆம், இதே தினத்தில் இந் திய தேசத்தின் பிரதமராக பதவி வகித்து வந்த ராஜீவ் காந்தி மர்ம நபர்களால், தமிழகத்தில் (ஸ்ரீபெரும்புதூரில்) படுகொலையானாா். 

அச் சம்பவத்தினால் மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்கள் கூட நிச்சயம் அந்த நாளை மறந்திருக்கவே மாட்டா ர்கள். ஆம், அப்படியானதோர் அதி ர்ச்சி மற்றும் துயர் சம்பவம் அது. 

அகிம்சையின் வழியே இந்திய தேசத் தினை விடுதலை வெளிச்சத்தினை நோக்கி நகர்த்திய புகழ் மிக்கதொரு குடும்பத்தில் பிறந்திருந்த போதும், அரசியலில் அவ்வளவாக நாட்டமில்லாது இருந்த ராஜீவ், அவரது தம்பி சஞ் சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட சூழலின் காரணமாக அரசியலில் கால் பதித்தவர். 

தொடர்ச்சியாக அரசியலில் செயற்பட்டு வந்த ராஜீவ், 1991 ஆம் ஆண்டு தமிழ கம் வருகை தந்ததுவும் தேர்தல் பிரச்சாரம் ஒன்றிற்காக 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாா். 

இதோ 27 வருடங்கள் உருண்டோடியுள்ளன அச் சம்பத்தினை தன்னால் இன் னும் மறக்கவும் - ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை என்கிறார் மூத்த பொது வுடைமை தலைவர் தா.பாண்டியன். 

இந்த நிலையில் இன்று தலைநகர் தில்லியிலுள்ள ராஜீவ் நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனா்.