Breaking News

மறைந்தாா் சித்தர் பாலகுமாரன் இலக்கிய உலகம் சோகத்தில்!

தமிழ் எழுத்துலகின் புகழ்பெற்ற எழுத்தாளரும் வசனகர்த்தாவுமாகிய பாலகுமாரன் மாரடைப்பால் காலமானார். கடும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட் டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார் நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரி யர் சுலோசனா என்பவருக்கு மகனா கப் பிறந்த பாலகுமாரன் பதினொன் றாம் வகுப்பு வரையே பயின்றார்.

இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணி யாற்றத் தொடங்கியதோடு அவ்வாண்டிலேயே கவிதைகள் வரைய ஆரம்பித்தாா். 

பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிய தோடு திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அந்த பணியை கைவிட்டார்.

பாலகுமாரன் எழுத்துத் துறையில் நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டு ரைகளையும் எழுதியுள்ளார்.

இயக்குனர் பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வை யில் இயக்கினார்.

பாலகுமாரன் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம் வாய்ந்தவை. எழுத்துத்துறை, திரைத்துறை போன்றவற்றில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளாா்.

திரைப்படத்துறையில் நாயகன், குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்க ளில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளதோடு தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

71 வயதில் சென்னையில் வசித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ் வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

எழுத்துச் சித்தர் என சிறப்பாக அழைக்கப்பட்ட பாலகுமாரனின் இந்த திடீர் மறைவு இலக்கிய உலகில் அனைவரையும் ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.