கடலால் சூழப்பட்ட நாடா கடனால் சூழப்பட்ட நாடா ?....கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் !
நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டி த்து கிளிநொச்சியில் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (21-05-2018) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.
இன்று (21) காலை பத்து மணிக்கு கிளி நொச்சி காக்கா கடைச் சந்தியிலி ருந்து ஆரம்பித்த கண்டன ஆா்ப்பாட் டம் டிப்போ சந்தி வரை சென்று முடி வடைந்தது.
இதன்போது பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்ற த்தை கண்டித்து முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஒன்று திரண்ட பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் ஊர் வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனா்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வயி ற்றில் அடிக்காதே, அரசியல் தீர்வா விலைவாசி உயர்வா?, அரசே விலையைக் குறை கூட்டமைப்பே மௌனத்தைக் கலை, அரசியல் தீர்வுக்கு பரிசு விலை வாசி உயர்வா?,
உள்ளுர் உற்பத்திக்குச் சந்தையைத் தா? வெளிநாட்டு இறக்குமதிக்கு தடையே போடு,வேலைவாய்ப்பை தா? விலையேற்றத்தை குறை, விவசாயிகள் பாடு திண்டாட்டம் முதலாளிகள் பாடு கொண்டாட்டம், சிறு கடன் தொடர் கடன் பெருங்கடனில் நாங்கள் கூட்டாட்சி நல்லாட்சி கொழுத்த ஆட்சியில் நீங்கள், நெல்லுக்கு நிர்ணய விலை வேண்டும்.
விவசாயிகள் நிமரவேண்டும், கடலால் சூழப்பட்ட நாடா இல்லை கடனால் சூழப்பட்ட நாடா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தி ஆா்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.