Breaking News

வடமாகாண சபையினை கலைக்க வேண்டுமென : கூட்டு எதிர்க்கட்சி

புலி­களை நினை­வேந்­திய வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச தரப்­பிற்கு முன்­வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா?

வடக்கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என்­பன அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் இடம்­பெ­று­கின்­ற­னவா என்­பதை உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்டு மென கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோரிக்கை விடுத்துள்ளனா். 

வடக்கின் நிலை­மை­களை எந்த வகை­யி­லேனும் கட்­டு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஆகவே ஜனா­தி­பதி உட­ன­டி­யாக வட­மா­காண சபையை கலைத்து நாட்டின் அமை­தியை சீர­ழிக்கும், பிரி­வி­னையை தூண்டும் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்­கைளை எடுக்க வேண்டுமெனக் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் வலியுறுத்தி யுள்ளனா்.

வடக்கில் கடந்த 18ஆம் திகதி நடை­பெற்ற நினை­வேந்தல் நிழல்­வுகள் மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்கள் குறித்து தமது நிலைப்­பாட்­டினை கூறும் போதே அவர்கள் இதனை தெரி­வித்­தனர்.

இது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி பார­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன கூறு­கையில்,

வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச தரப்­பிற்கு முன்­வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் - பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா என் ­பதை உட­ன­டி­யாக மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும்.

வடக்கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை அனைத்­துமே அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப் ­புடன் இடம்­பெ­று­கின்­றதா என்­ப­தையும் கூற வேண்டும். இவ் விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வாய் திறக்­காது அமைதி காத்தால் இந்த நாடு மீண் டும் தீப்­பற்றி எரி­யக்­கூ­டிய நிலைமை ஏற்­படும். 

பயங்­க­ர­வா­தி­களை கொண்­டாடும், அவர்­க­ளுக்­காக நினை­வேந்தல் நடத்தும் உலகின் ஒரே ஒரு நாடு இலங்கை மட்­டு­மே­யாகும். உலகில் வேறு எந்­த­வொரு நாட்­டிலும் அவ்­வாறு பயங்­க­ர­வா­திகள் போற்­றப்­ப­டு­வ­தில்லை. பிர­பா­க­ர­னுக்கு மரி­யாதை செலுத்தி யுத்­தத்தை முடித்த மஹிந்த ராஜபக் ஷவை கள்வன் என கூறு­கின்­றனர்.

அர­சாங்கம் இன்று பிரி­வி­னை­வா­தி­களின் பக்கம் நின்றே தீர்­மானம் எடுக்­கின்­றது. ஆகவே அர­சாங்­கத்தை சாடு­வதில் எந்த பிர­யோ­ச­னமும் இல்லை. மக்கள் அடுத்த கட்­ட­மாக என்ன தீர்­மானம் எடுக்­கப்­போ­கின்­றனர் என்­பதே முக்­கி­ய­மா­ன­தாகும்.

மக்கள் இனியும் இந்த ஆட்­சி­யினை அனு­ம­தித்து நாட்­டினை துண்­டாட இட­ம­ளிக்­கப்­போ­கின்­ற­னரா அல்­லது ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முன்­வ­ரு­வார்­களா என்­பதை நாமும் பார்த்­து­கொண்­டுள்ளோம் எனக் குறிப்­பிட்டார்.

பீரிஸ் கருத்து

இது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பினர் ஜி.எல்.பீரிஸ் கூறு­கையில்,

இன்று நாட்டில் மிகப்­பெ­ரிய இன­வாத சக்­திகள் தலை ­தூக்­கி­யுள்­ளன. வடக் கில் தமிழ் பிரி­வி­னை­வாதம், கிழக் கில் முஸ்லிம் பிரி­வி­னை­வாதம் என நாட்டின் மக்­களை நாச­மாக்கும் சக்­தி­களை அர­சாங்­கமே உரு­வாக்­கி­யுள்­ளது. 

வட­மா­காண முத­லை­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் சிவா­ஜி­லிங்கம் போன்றோர் இன்று முன்­வைக்கும் கருத்­துக்கள் மிகவும் பார­தூ­ர­மா­னவை. வடக்கு கிழக்கு தனி இராஜ்­ஜியம் உரு­வாக்­கப்­ப­டு­வது, சர்­வ­தேச தலை­யீ­டுகள், இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது போன்ற கருத்­துக்­களை அவர்கள் தைரி­ய­மாக முன்­வைக்கக் கூடிய நிலை­மையை இன்று அர­சாங்கம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளது. 

ஒவ்­வொரு ஆண்டும் புலி­களை நினைவு கூரவும் நினை­வுத்­தூபி அமைக்­கவும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த செயற்­பா­டுகள் அனைத்­தை யும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஏனைய அமைச்­சர்­களும் வேடிக்கை பார்த்து வரு­கின்­றனர். 

 நாம் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து இந்த நாட்டில் பாரிய அபி­வி­ருத்தி, மற்றும் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். இன ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­தினோம். ஆனால் இந்த அர­சாங்கம் கடந்த மூன்று ஆண்­டு­களில் மீண்டும் பழைய நிலை­மை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. 

மீண்டும் வடக்கில் இன­வாத சக்­திகள் தலை­தூக்கி வடக்கு கிழக்­கினை துண்­டாடும் நிலை­மைகள் உரு­வா­கி­யுள்­ளது. புலிகள் வடக்­கிற்கு தேவை என்ற கரு த்­துக்­களை வெளிப்­ப­டை­யாக கூறும் நிலைமை வடக்கில் உரு­வா­கி­யுள்­ளது. வட­மா­காண சபையில் நினை­வேந்தல் நிகழ்­வுகள் ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­டு­கின்­றது, 

பாட­சா­லை­களில், கடை­களில், வீடு­களில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டுகள் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நிறை வேற்று அதிகாரங்கள் இன்றும் ஜனாதிபதி கைகளில் உள்ளது. 

எனவே வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுபடுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். அவரது அதிகாரங்களை கொண்டு உடனடியாக வடமாகாண சபையை கலைக்க வேண்டும். 

அத்துடன் நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் விக்னேஸ்வரன், மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.