கைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா.! - THAMILKINGDOM கைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா.! - THAMILKINGDOM
 • Latest News

  கைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா.!

  சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பெண்கள் குறித்த தகவல்களை வெளி யிடுமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

  குறித்த 7 பெண்களும் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என் பதை சவுதி அரசாங்கம் தெளிவுபடு த்த வேண்டுமென  ஐ.நா. மனித உரி மைகள் ஆணையத்தின் பேச்சாளர் எலிசபெத் த்ரொஸ் செல் தெரிவித் துள்ளார்.

  சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவிருந்த நிலையில் ஆறு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் காரணம் குறிப்பிடப்படாது கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். 

  சர்வதேச சக்திகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு வந்தமையினாலேயே கைது செய்யப்பட்டதாக சவுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. பெண்கள் ஏதேனும் செயல்களையோ அல்லது தீர்மானங்களையோ மேற் கொள்வதற்கு ஆண்களின் அனுமதியை கோர வேண்டும் என்பதற்காக கடு மையான சட்டங்கள் சவுதியில் காணப்படுகின்றன. 

  திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வது ஆகிய வற்றிற்கும் சவுதியில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தடை அண்மையில் தளர்த்தப்பட்டது. அந்த வரிசையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்குவதற்கு தற்போது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top