Breaking News

நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என - மஹிந்த ராஜபக்ஷ

கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் விகாரதிபதி கொபவக தம்மானந்த தேரர் மற்றும் விதாபொல சோபித தேரர் ஆகியோர் மீது மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் யாருக் குமே பாதுகாப்பு இல்லை. தலைவர்கள் தூக்கத்தில் இருப்பதனாலேயே இவ் வாறு இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளாா். 

கேள்வி : துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான விகாராதிபதி கோட்டாபாய ராஜ பகஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், அதன் கார ணமாக அவரும் இச் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படு கின்றது? 

பதில் : அவ்வாறு எதுவும் இல்லை. அதில் எந்த உண்மையும் இல்லை. 

கேள்வி : தற்போது நாட்டில் காணப்படும் இந்நிலைமை தொடர்பாக உங்க ளுடைய கருத்து? 

 பதில் : இவ்வாறான விடயங்கள் குறித்து விஷேடமாக கவனத்தில் கொள்ளப் பட வேண்டும். அதே வேளை நியாயமான துரித விசாரணைகளும் முன்னெ டுக்கப்பட வேண்டும். இவற்றுக்கான தீர்வுகள் விரைவில் காணப்படா விட் டால் நாட்டில் எவருக்குமே வாழ முடியாத நிலை தோன்றிவிடும். 

யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இது நாட்டுக்கு நல்லதல்ல. இவ்வாறான சம்ப வங்கள் மூலம் நாட்டில் நீதி எந்த நிலையில் உள்ளது என்பது தெளிவாகின்றது. எவ்வாறிருப்பினும் நீதி அமைச்சு தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.