இந்தியா – சீசெல்ஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து.! - THAMILKINGDOM இந்தியா – சீசெல்ஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து.! - THAMILKINGDOM

  • Latest News

    இந்தியா – சீசெல்ஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து.!

    இந்தியாவுக்கும் கிழக்கு ஆபிரிக்க நாடான சீசெல்ஸுக்கும் இடையே 6 ஒப்பந் தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. 

    இந்தியாவுக்கு 6 நாள் விஜயம் மேற் கொண்டுள்ள சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபௌரேவை (Danny Faure) இந் திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவேற்றுள்ளனர். 

    சீசெல்ஸிலுள்ள அசம்ப்ஸன் (Assumption Island) தீவில் இந்திய கடற்படைத் தளம் அமைக்கப்படும் எனவும் குறித்த கடற்படைத் தளத் திட்டத்தில் இரு நாடு களும் இணைந்துசெயல்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    சீசெல்ஸின் பாதுகாப்புத்துறையை பலப்படுத்துவதற்காக இந்தியா 10 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன், இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்த, இந்தியாவும் சீசெல் ஸும் உறுதி பூண்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளர்.

    இந்தியாவுடனான உறவைப் பலப்படுத்தவும் அதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதற்காகவும் தாம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தாக சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபௌரே தெரிவித்துள்ளார். முன்னதாக டில்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்துக்கு டேனி ஃபௌரே அஞ்சலி செலுத்தியுள்ளனா்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: இந்தியா – சீசெல்ஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து.! Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top