மாங்குளத்தில் அலுவலகம் அமைக்க தண்ணீர் இல்லை - சி.வி.விக்னேஸ்வரன்.!
வடமாகாண காணியாளர் அலுவலகம் கிளிநொச்சியில் அமைப்பத்ற்கு நட வடிக்கை மேற்கொண்டுள்ளோம். குறித்த அலுவலகம் மாங்குளத்தில் அமைப் பற்காக ஆய்வு செய்த போது தண்ணீர் இல்லையென வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
வடக்கு மாகாண சபையின் 124 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவை செயலத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடை பெற்றது.
நீர் வசதி உட்பட ஏனைய அடிப்படை வசதிகளையும் கருத்தில் கொண்டு மாகாண காணியாளர் அலுவலக த்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 255 ஆவது மைல் கல் பகுதியிலும் கிளிநொச்சி பழைய கச்சேரிப் பகுதியிலும் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விரைவில் வேலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எமது அமைச் சினால் எடுக்கப்படவுள்ளது. இதை அமைப்பதற்கான பணம் பிரதம செயலாளர் வசம் இருக்கின்றது. இது தொடர்பான வேலைகள் தொடங்கியதும் பணம் வழங்கப்படும்.
விரைவில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
இதேவேளை 2014 ஆம் ஆண்டு கொரியாவில் இருந்து இதற்கான நிபுணர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களின் ஆய்வில் மாங்குளத்தில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் நிலத்தின் கீழ் பாறைகள் இருப்பதாகவும் இதற்கான நீரை வவுனிக்குளத்தில் இருந்து அல்லது வேறு இடத்தில் இருந்தே எடுத்துவர வேண்டுமெனத் தெரி வித்துள்ளாா்கள்.
இதனை நாங்கள் கூறவில்லை. நிபுணர்களாலேயே கூறப்பட்ட தரவாகும். நீரை மாத்திரமன்றி அனைத்து விடயங்களையும் கருத்தில் எடுத்தே இதனைச் செய்துள்ளோம்.
அனைத்து வசதிகளையும் கொண்ட காணி கிடைக்கும் என்றால் அதற்கான திட்டங்களை வேகமாக செய்வோம் என்றார்.
வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் க.வ.கமலேஸ்வரன்,
வடமாகாண முதலமைச்சர் .க.வி.விக்னேஸ்வரனிடம் வாய்மூலம் கேட்கும் வினா என தங்கள் அமைச்சின் 2017 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு உரையின் போது எனது முன்மொழிவின் அடிப்படையிலும் முக்கியத்துவத்தின் காரணத் தினாலும் தங்கள் பதிலுரையில் மாகாண காணி ஆணையாளர் அலுவல கத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு பரீசீலிக்க முடியுமெனத் தெரிவித்தி ருந்தீர்கள்.
இதுவரை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? இந்த மாகாண சபை காலம் முடிவதற்குள் மாங்குளத்தில் அமைப்பதற்கான திட்டம் உள்ளதா? அல் லது இனிவரும் காலத்திலாவது இவ்விடயம் தொடர்பாக பரீசீலிப்பீர்களா என கோரியிருந்தார். இதற்கு பதலிளிக்கும் வகையிலேயே வடமாகாண முதல மைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.