மாவை சுமந்திரனின் தில்லுமுல்லை அம்பலப்படுத்தும் மீனவர்கள்(காணொளி)
வௌிமாவட்ட மீனவர்கள் அட்டைத் தொழிலில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர்.
வெளிமாவட்ட மீனவர்கள் வந்து இங்கு தொழில் செய்வதற்கு மாவை,சுமந்திரனே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர். இழுவைமடி தடைக்காக வர்த்தகமானி 2017 ஆண்டு ஆடிமாதம் வெளியாகியபோதும் அதனை அமுல்படுத்தாமல் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு இவர்கள் இருவருமே காரணமாகும் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு அதனாலேயே போராட்டத்திலிருந்து மாவை சேனாதிராசாவை வெளியேற்றியதாக தெரிவித்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக யாழ் நீரியல் திணைக்களத்தை ஸ்தம்பிக்க செய்ய முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு மாவட்ட செயலகம் மற்றும் நீரியல் திணைக்களத்திடமும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.