Breaking News

தேர்தல்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தது எப்போது?

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவது அவசியம் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் மூன்று ஊழல் மோசடி மிகுந்த தேர்தல்கள் பெற்றுள்ளன என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் 1999 இல் வட மேல் மாகாணசபை தேர்தல்,1982 சர்வ ஜன வாக்கெடுப்பு, 1981 இல் நடை பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் ஆகியவையே இலங்கையின் வரலாற்றில் மோசமானவை எனவும் தெரிவித்துள்ளார். 

1981 இல் நடைபெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் தேர்தல் கட மைகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் அற்ற வெளிமாவட்டத்தவர்களை அரசாங்கம் ஈடுபடுத்தியது, இதன் காரணமாக வாக்குப்பெட்டிகள் பல காணா மல் போயின, பின்னர் சில கண்டு பிடிக்கப்பட்டன என தேர்தல் ஆணையாளர் நினைவு கூர்ந்துள்ளார். 

இந்த தேர்தல் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல்கள் மீது நம் பிக்கை இழக்க காரணமாக அமைந்தது ,வாக்கு சீட்டிற்கு பதில் துப்பாக்கி குண் டுகள் என்ற நிலைமை உருவாக காரணமாக அமைந்ததாகவும்  தெரிவித்துள் ளார். 

சிலர் 1983 கலவரமே வடக்கில் ஆயுதக்குழுக்கள் பலப்படுவதற்கான காரணம் என கருதுகின்றனர் எனினும் நான் 1981 மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலே இந்த குழுக்கள் உருவாகுவதற்கான அடித்தளத்தையிட்டது என நான் கருது கின்றேன் என தெரிவித்துள்ளார்.