Breaking News

முதலாவது விஸ்வரூப வெற்றியை பதிவு செய்தது ரஷ்யா.!

பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 21ஆவது அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் சவூதி அரேபியாவை மொஸ்கோ லுஸ்னிஸ்கி விளையாட்டரங் கில் எதிர்த்தாடிய ரஷ்யா 5 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் அமோக வெற்றி யீட்டியுள்ளது. 

ரஷ்யாவில் முதல் தடவையாக நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ரஷ்யா ஈட்டிய இந்த வெற்றி சொந்த நாட்டு இரசிகர்களைப் பெரும் பரவசத்தில் ஆழ்த்தியது. 

அதி சிறந்த கால்பந்தாட்ட நுட்பத் திறன்களுடன் சவூதி அரேபியாவை திணற வைத்த ரஷ்யா இடைவேளையின்போது 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படை யில் முன்னிலை வகித்தது. 

போட்டியின் உபாதையீடு நேரத்தில் 2 நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு ரஷ்யா தனது கோல் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்திக்கொண்டது. உலகக் கிண்ண வரலாற்றில் ஆரம்பப் போட்டி ஒன்றில் அதிக கோல்கள் போடப்பட்ட போட்டி இதுவாகும். 

ஆரம்பத்திலிருந்து சவூதி அரேபிய கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்த ரஷ்யா, 12ஆவது நிமிடத்தில் அலெக்ஸாண்டர் கோலோவின் மத்திய இடது புறத்திலிருந்து உயர்த்தி உதைத்த பந்தை நோக்கி உயரே தாவிய யூரி கெஸின்ஸ்கி தலையால் முட்டி அபார கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார். 

43ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் 3 வீரர்களின் தடுத்தாடலை முறி யடித்து 6 யார் கட்டடத்துக்கு சற்று வெளியே இருந்து டெனிஸ் செரிஷேவ் ஓங்கி உதைத்த பந்து ரஷ்யாவின் இரண்டாவது கோலுக்கு காரணமானது. 

இடைவேளைக்குப் பின்னர் 56 நிமிடத்தில் சவூதி அரேபியாவுக்கு கிடைத்த அருமையான கோல்போடும் வாய்ப்பை ரஷ்யாவின் கோலுக்கு மிக அருகா மையில் தய்சீர் தவறவிட்டுள்ளாா். 

தொடர்ந்து 72ஆவது நிமிடத்தில் கோலோவின் பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய டிஸியுபா கோலாக்க ரஷ்யாவின் கோல் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. 

அதன் பின்னர் சவூதி அரேபியா தடுத்தாடும் உத்தியுடன் விளையாடி ரஷ்யா வின் முயற்சிகளைத் தடுத்த வண்ணம் இருந்தது. எனினும் போட்டி 90 நிமிடங் களைக் கடந்து உபாதையீடு நேரத்துக்குள் பிரவேசித்து ஒரு நிமிடமான போது கிரிஷேவ் தனது இரண்டாவது கோலைப் போட்டார்.

போட்டி முடிவடைய சில செக்கன்கள் இருந்தபோது கிடைத்த 20 யார் பீறீ கிக்கை மிக அருமையாக கோலாக்கினார் கோலோவின். இப் போட்டியில் கோலோவின் (ரஷ்யா), தய்சர் (சவீதி அரேபியா) ஆகிய இருவருக்கும் ஆர் ஜன்டீன மத்தியஸ்தர் நெஸ்டர் பிட்டானா மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுத்துள்ளாா். 

இப் போட்டியை ரஷ்ய ஜனாதிபதி விலடிமர் புட்டினும் கலந்து சிறப்பித்துள் ளாா்.