Breaking News

பறிக்கப்பட்ட உரிமையைக் கேட்பது இனவாதமாகாது - முதலமைச்சா்.!

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பித் தாருங்கள் எனக் கேட்பது இனவாதமாகாது என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், அதனை இனவாதம் எனக் கூறினால் அது சிங்கள அமைச்சர்களின் அறியாமை எனத் தெரிவித்துள்ளாா். 

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒரு இன வாதிபோல் செயற்படுகிறார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியி ருந்த கருத்து தொடர்பாக நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளாா். 

 மேலும் அவர் கூறுகையில், 

”போருக்கு பின்னர் வடகிழக்கு தமிழ் மக்களிடம் உரிமை கேட்பதற்கு வலு வற்ற தன்மை இருந்தது. ஆனாலும் பின்னர் மக்கள் தங்களுக்கான உரிமை களை கேட்பதற்கு ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு தமிழ் மக்கள் உரிமை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெற்கி லிருந்து இவ்வாறான கருத்து வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் தங்களிடமி ருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளவும் தாருங்கள் என கேட்பது இன வாதம் ஆகாது. 

இல்லை அது இனவாதமே என கூறினால். அது தெற்கில் உள்ள அமைச்சர்க ளின் விளக்கமல்லாத வெளிப்பாடே ஆகும். மேலும் தமிழ் மக்கள் உரிமை கேட்பது சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால் அந்த உரி மைக்குரல் சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடகவே காட்டப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளாா்.