Breaking News

சம்பந்தன் - விக்கினேஸ்வன் நேரடிச் சந்திப்பு அவசியம் - பிரித்தானியக் கிளையின் வேண்டுகை.!

வடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக் கான போட்டி சுமூகமாக தீர்க்கப் படவேண் டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் தேசிய ; கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகி யோர் உடனடியாக நேரில் சந்தித்து பரஸ் பர பேச்சுக்களை நடத்த வேண்டுமென கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை வலியுறுத்தியுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பிரித்தானிய கிளையின் சர்வதேச இணைப்பாளர் ஐ.தி.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

தற்போது தமிழ் மக்கள் பலயீனமுற்ற நிலையில் ஒற்றுமை இன்மையால் பல பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வடமாகாண சபை தேர்தல் முதல்வர் தெரிவு போட்டியை வளர்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது.

பல தீயசக்திகள் த.தே.கூட்டமைப்பையும் தமிழ் அரசுக் கட்சியையும் பிளவு படுத்துவதற்கு சூழ்ச்சிகளை மேற்கொள்வதை அனைவரும் அறிவார்கள். இச் சூழ் நிலையிலிருந்து தப்புபவதற்கு வழியுண்டு.

நாம் மிக விவேகமாக நடந்து கொள்ளவேண்டும். பிரித்தானியா கிளையானது புலம்பெயர் அமைப்பகளுடனும் தமிழர்களுடனும்; கலந்துரையாடியபோது பல கருத்துக்களை வெளியிட்டனர்.

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தேவையற்ற போட்டிகள் தவிர்க்கப் பட வேண்டும் என்பது அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களின் அபிப்பிராயமாகும்.

அதனடிப்படையில் கூட்டமைப்பு தலைவர் இராh.சம்பந்தன், வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்நித்து பேச வேண்டும் என்பது அக்கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் அபிப் பிராயமாகும்.

கடந்த வடமாணகான சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதன்மை வேட் பாளராகக் கொண்டுவந்தவர் சம்பந்தன் என்பதை எவரும் மறுக்க முடியாது. விக்னேஸ்வரன் முதல்வராக வந்த பின்னர் கூட்டமைப்புடன் முரண்பட் டதையும் மறைக்க முடியாது.

அவருக்கு ஆலோசனை வழங்கிய சிலரால் விட்ட தவறை உணர்ந்து வட மாகாண சபையின் அபிவிருத்திக்காக உழைப்பேன் என்று உறுதியளித்த வரு கின்றார்.

மனிதன் பிழைவிடுவது இயல்பு, அதைத்திருத்திக்கொள்வபன் பெரும் மனி தன் என்று தந்தை செல்வநாயம் அடிக்கடி கூறுவதுண்டு. அதன்பால் இருவ ரும் மனம் விட்டுப் பேச்சுக்களை நடத்தி கடந்தகால தவறுகளைத் திருத்திக் கொள்வது அவசியமாகின்றது.

அத்துடன் வடமாகாண சபையின் அடிப்படை நோக்கமான பொருளாதார அபி விருத்திக்கு உழைப்பேன் என்று விக்னேஸ்வரன், சம்பந்தனுக்கு உறுதி அளிப் பாரயின் வடமாகாண சபைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதே புலம் பெயர்ந்தவர்களின் நிலைப்படாகின்றது.

எனவே சம்பந்தன் திரு.விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் உடன் சந்தித்து பேச வேண்டுமென்பதே புலம்பெயர் தமிழர்களினதும் பிரித்தானிய கிளையின் வேண்டுகோளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.