விக்னேஸ்வரன் கௌரவமாகப் பதவி விலக வேண்டுமாம் - சி.தவராசா.! - THAMILKINGDOM விக்னேஸ்வரன் கௌரவமாகப் பதவி விலக வேண்டுமாம் - சி.தவராசா.! - THAMILKINGDOM

  • Latest News

    விக்னேஸ்வரன் கௌரவமாகப் பதவி விலக வேண்டுமாம் - சி.தவராசா.!

    வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடு தவறானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால் கௌரவமாக அவர் பதவி விலக வேண்டுமென மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா எச் சரிக்கை விடுத்துள்ளாா். 

    வட மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி துறை அமைச்சராக தொடர்ந் தும் பா.டெனீஸ்வரனே பதவி வகிப் பார் என கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலே எதிர்க் கட்சி தலைவர் இக் கருத்தை தெரிவித்துள்ளாா். 

    வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசாவின் அலுவலகத்தில் இன்று மாலை ஊடக சந்திப்பு இடம்பெற்றது.  ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர், வட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் நீதி மன்றத்தினால் தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், சி.வி. விக்னேஸ்வரன் தனது பதவியை துறக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: விக்னேஸ்வரன் கௌரவமாகப் பதவி விலக வேண்டுமாம் - சி.தவராசா.! Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top