மக்களின் நன்மைக்காக எவ்வித திருத்தமும் நடைபெறவில்லை - ஞானசார
அரசாங்கம் தமது தேவைகளுக்கு மாத்திரமே அரசியலமைப்பில் திருத்தங் களை உருவாக்கி கொள்கின்றதே தவிர மக்களின் நலன் குறித்து இதுவரை காலமும் எவ்வித அரசியல் திருத்தங்களையும் மேற்கொண்டு நடைமுறைப் படுத்தவில்லை என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கங்கள் தமது தேவைகளை யும் அரசியல் இருப்பினையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அரசி யலமைப்பில் திருத்தங்களை மேற் கொண்டு வருகின்றது.
இவ்வாறு அரசியலமைப்பு தொடர்ந்து மாற்றமடையும் போது அரசியலமைப் பின் தன்மை எந் நிலையில் உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெது எதிரணியினர் முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜ பக்ஷவை களத்தில் இறக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா்.
இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மீண்டும் ஜனாதிபதி தேர்த லில் போட்டியிட முடியாது என்ற தடை முன்னாள் ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தத்தில் காணப்படுகின்றது. ஆனால் 18 ஆவது திருத்தம் இவருக்கு சாதக மாகவே உள்ளது.
ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலினை நடத்தி பொது எதிரணி ஆட்சி கைப்பற்றி 18 ஆவது திருத்தத்தினை மீண்டும் அமுல் படுத்தவே முயற்சிக்கின்றது.
ஆனால் மறுபுறம் தேசிய அரசாங்கமும் தற்போது தேர்தல் தொடர்பில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந் நிலையில் அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கிண ங்க திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.